Saturday, 8 February 2014

சில சித்தர்கள் பாடல்களை--- சிந்தியுங்கள்.

இங்கே சில சித்தர்கள் பாடல்களை தருகிறேன் இதில் ரகசியம் இருக்கிறதா என்று சிந்தியுங்கள்.

அகத்தியர்:
---------------
"பதியின்ன இடமென்ற குருவைச் சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலைஇரண்டாகும்" எனக் கூறுகிறார் அகத்தியர்.

பதி என்ன இடம் என்ற - இறைவன் இருக்குமிடம் இது என நமக்கு குருவை சொல்லும் - சொல்லக்கூடிய குரு - நமது ஜீவன், தல இரண்டாகும் - இரண்டு தலையாகும் - அதாவது தலைக்கு தலையாக உள்ள இரண்டு கண்களாகும் -

கண்களில் உள்ளது. பரப்பிலே விள்ளாதே - வெளியிலே சொல்லாதே நீ உணர்ந்து அறி எனக் கூறுகிறார். இதைசிலர் இறைவன் இருக்குமிடம் எது என குரு சொன்னதை வெளியில் சொன்னால் உன் தலை இரண்டாக வெடித்துவிடும் என

தமிழ் தெரியாத முட்டாள்கள் மக்களை பயமுறுத்தி விடுகின்றனர். யாருக்கும் தலை வெடிக்காது தைரியமாக உண்மை ஞான ரகசியங்களை எல்லோரும் அறிய எடுத்தியம்பி எல்லாரும் மேன்மையடைய உதவுங்கள்.

"காணுகின்ற ஓங்கார வட்டம் சற்றுச்
கனலெலுப்பிக் கண்ணிலே கடுப்புத் தோன்றும்".

நாம் காணுகின்ற கண்களில் நமது கண்களில் கண்ணைத்தான் ஓங்கார வட்டம் என்றார். அங்கே ஜீவா ஒளி உள்ளது. நமது நினைவை கண்மணியில் நிறுத்தும்போது, சாதனை புரியும் போது கனல் எழும்பும் என்றும் அப்போது கண்களில்

கடுப்பு தோன்றும் எனவும் அகத்தியர் அனுபவ நிலை பற்றி மறைப்புமின்றி வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிவவாக்கியர்:
---------------------
"கண்ணில் நின்று கண்ணில் தோன்றும் கண்ணறிவிலாமையால் என்னுள் நிண்ட என்னையும் யானறிந்த தில்லையே"

பட்டினத்தார்:
-----------------
"கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சேநீ
எண்ணாத மாய்கையெல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய்கேள் பார்க்க வேண்டும்தனையும் பத்தரை மாற்றுந்தங்கம் ஆக்கப் போகாதோ உன்னால்"

இடைக்காடர்:
-------------------
"கண்ணுள் மணியை கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கொளியைக் போற்றீரே"

நிஜானந்த போதம்:
---------------------------
"புருவமென்ற சுழுமுனையில் மைந்தா கேளுபோதமென்ற அருள்ஞான செந்தீ பற்றித்
திருவிருந்த மாளிகையில் தீபங் காணும்செங்கமலக் கண்ணாலே நன்றாய்ப்பாரு
குருவிருந்த இருதயமாம் முக்கோணத்தில்
குவித்து மனக் கண்ணாலே தன்னைப் பார்த்தால்
கருவிருந்த பதியதுதான் மைந்தா மைந்தாகண் காணத் தோன்றுமடா கருவைப் பாரே"

எவ்வளவு எளிமையாக தெளிவாக விளக்கமாக உள்ளது. இதை புரிந்து கொள்ளாதவர்கள் ஒன்றுமே புரிந்து கொள்ள மாட்டார்கள். சிந்தித்து, கன்னல் பார்த்து அறிக.

கருவூரார் :
---------------
"காணாத காட்சியெல்லாம் கண்ணில் காணும்
கலங்காதே மெய் மயக்கம் மெத்தவாகும்
மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு
கோணாத முக்கோணத் குறியைப் பாரு ............"

சட்டைமுனி நாயனார்:
--------------------------------
"மனோன்மணியாம் புருவமையத்தூடே சென்று
ஒளியோடே மவுனத்தை யோட்டி யூதாய்"

காகபுசுண்டர்:
---------------------
"காணாத காட்சியெல்லாங் கண்ணிற்கண்டு
காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்"

காகம் போல ஏக பார்வையால் ஒளியை உற்று நோக்கி உள்ளே இருந்தால் கண்ணில் அதுவரை நாம் காணாத அற்புதக் காட்சிகளைக் காணலாம் என்கிறார். தான் அவ்வாறு கண்டு காகபுசுண்டர் எனப் பெயர் பெற்றதாகக் கூறுகிறார்.

தாயுமான சுவாமிகள்:
-------------------------------
"கண்ணுள் நின்ற ஒளியை கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணுகின்றனர் நான்தொழும் தெய்வமே"

ஒரு சித்தர் ஒரு சொல் சொல்லியிருந்தால் இன்னொரு சித்தர் பாடலில் அதற்கு விளக்கம் இருப்பதைக் காணலாம். இப்படியே ஞானவான்களின் எல்லா நூல்களும் ஒன்றுகொன்று தொடர்புடையதாகவே காணும், ஏனென்றால் எல்லோரும்

மெய்பொருள் பற்றிதானே சொல்கின்றனர்.

No comments:

Post a Comment